திருடனை பிடிக்கும் ஆர்வத்தில் 2வது மாடியில் இருந்து விழுந்த நபர்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் திருடனை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து இடுப்பெலும்பு முறிந்த ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னை குமரன் நகர் வெங்கடாச்சலம் தெருவில் வசிப்பவர் ராஜா என்ற 37 வயது பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவர் இரண்டு மாடி கொண்ட வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் நிலையில் சம்பவ தினத்தன்று மொட்டைமாடியில் தூங்கியுள்ளார். திடீரென நள்ளிரவில் தனது வீட்டின் வீட்டில் ஏதோ சத்தம் கேட்பது போல் தோன்றியதால் உடனே வீட்டில்
 

திருடனை பிடிக்கும் ஆர்வத்தில் 2வது மாடியில் இருந்து விழுந்த நபர்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் திருடனை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து இடுப்பெலும்பு முறிந்த ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை குமரன் நகர் வெங்கடாச்சலம் தெருவில் வசிப்பவர் ராஜா என்ற 37 வயது பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவர் இரண்டு மாடி கொண்ட வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் நிலையில் சம்பவ தினத்தன்று மொட்டைமாடியில் தூங்கியுள்ளார்.

திடீரென நள்ளிரவில் தனது வீட்டின் வீட்டில் ஏதோ சத்தம் கேட்பது போல் தோன்றியதால் உடனே வீட்டில் வந்து பார்த்தபோது அங்கு ஒரு திருடன் பீரோவை திறந்து பொருட்களை எடுக்க முயற்சிப்பது தெரிய வந்தது. உடனே ராஜா அந்த திருடனை பிடிக்க முயற்சிக்க, இருவரும் சில நிமிடங்கள் கட்டிப்பிடித்து சண்டை போட்டுள்ளனர்.

அப்போது திருடன் 2 வது மாடியில் இருந்து வேகமாக குதிக்க, திருடனை பிடிக்கும் வேகத்தில் ராஜாவும் குதிக்க, இதனால் ராஜாவின் இடுப்பு எலும்பு முறிந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ராஜாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்த குமரன் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடனை பிடிக்க தீவிர முயற்சியில் உள்ளனர்.

From around the web