தாய் இறந்தது தெரியாமல் எழுப்பும் 2 வயது குழந்தை!!

கொரோனாத் தொற்று மார்ச் மாதம் இந்தியாவில் கால் பதித்த நிலையில், கட்டுக்குள் கொண்டுவர் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது. இதனால் பலரும் தங்களது சொந்த ஊர் நோக்கிப் பயணம் செய்தனர். சிலர் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடைபயணம், சைக்கிள் பயணம் என பலநூறு கிலோமீட்டர்களைக் கடந்தனர். இந்த அவலத்தினைத் தடுக்கும்பொருட்டு, மத்திய அரசு சிறப்பு ரெயில்கள் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறது. அந்தவகையில் சிறப்பு ரெயில்
 
தாய் இறந்தது தெரியாமல் எழுப்பும் 2 வயது குழந்தை!!

கொரோனாத் தொற்று மார்ச் மாதம் இந்தியாவில் கால் பதித்த நிலையில், கட்டுக்குள் கொண்டுவர் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது.

இதனால் பலரும் தங்களது சொந்த ஊர் நோக்கிப் பயணம் செய்தனர். சிலர் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடைபயணம், சைக்கிள் பயணம் என பலநூறு கிலோமீட்டர்களைக் கடந்தனர்.

இந்த அவலத்தினைத் தடுக்கும்பொருட்டு, மத்திய அரசு சிறப்பு ரெயில்கள் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறது. அந்தவகையில் சிறப்பு ரெயில் மூலம் குஜராத்தில் இருந்து புறப்பட்டு தனது இரண்டு குழந்தைகளுடன் பீகார் வந்து அடைந்த பெண் இறந்துவிட்டார்.

தாய் இறந்தது தெரியாமல் எழுப்பும் 2 வயது குழந்தை!!

இவர் கடந்த ஒரு மாதமாக வேலை ஏதும் இல்லாததால், சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் தவித்து வந்துள்ளார். அதன்பின்னர் நடைபயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த இவருக்கு சிறப்பு ரெயிலில் இடம் கிடைக்க ஒருவழியாக குஜராத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்.

மேலும் 2 வாரங்களாக சரிவர சாப்பிடு கிடைக்காத நிலையில் உடல்நலம் குன்றி இருந்த இவர், பீகார் ரெயில்வே நிலையத்தினை நெருங்குவதற்கு 20 நிமிடங்கள் முன்பே இறந்துள்ளார்.

ரெயில்வே பிளாட்பாரத்தில் இவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், ரது இரண்டாவது குழந்தை, தாய் போர்த்தி இருக்கும் போர்வையினை இழுத்து எழுப்ப முயற்சிக்கிறது. அப்போது முதல் குழந்தை ஓடிச் சென்று குழந்தையை கூட்டி வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

From around the web