திடீர் ஆய்வு! சுகாதாரமற்ற 2 லட்சம் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் குடிநீர் தொழிற்சாலையில் சுகாதாரமற்ற இரண்டு லட்சம் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்ததாக தகவல்!
 
திடீர் ஆய்வு! சுகாதாரமற்ற 2 லட்சம் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்!

சுத்தம் சோறு போடும் என்றே முன்னொரு காலத்தில் கூறுவர் அதற்கேற்ப சுத்தமானது மிகவும் பெரிதாக கருதப்பட்டது. மேலும் சுகாதாரம் பேணுதல் மற்றும் ஒரு கண்ணாக காணப்பட்டது. தற்போது நாடு முழுவதும் சுகாதாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காரணம் என்னவெனில் நாட்டில் கண்ணுக்கே தெரியாமல் மக்களை நோய்களுக்கு தள்ளும் கொரோனா தாக்கமானது அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு விதிகளை விதித்துள்ளது.

water bottle

மேலும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு கொரோனா நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் சுகாதாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நகராட்சி ஊழியர்கள் அனைவரும் தங்களது பணியில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் மத்தியில் சிவகங்கை மாவட்டத்தில் தற்போது திடீரென்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி அவர்கள் ஆய்வில் சுகாதாரமற்ற தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள குடிநீர் தொழிற்சாலை ஒன்றில் நடைபெற்றது. மேலும் இந்த குடிநீர் தொழிற்சாலையில் திடீரென்று ஆய்வு நடத்தப்பட்டு அங்கு சுகாதாரமற்ற இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள். மேலும்  கொரோனா காலகட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுகாதாரமற்றவைகளாக  காணப்படுவதால் அங்கு சுகாதாரத்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

From around the web