புயலால் உயிரிழந்தால் 2 லட்சம்! காயம் ஏற்பட்டால் 50000!!-ஆணை;

புயலால் உயிரிழந்தோருக்கு தலா 2 லட்சமும் காயமுற்றோர் ஐம்பதாயிரம் நிவாரணம் வழங்க மோடி ஆணை!
 
strom

சில தினங்களுக்கு முன்பாக அரபிக்கடலில் மிகவும் வலுவான டவ் தே புயல்ஒன்று இருந்தது. இந்த புயலின் காரணமாக இந்தியாவிலுள்ள பல பகுதிகளில் பெரும்பாலும் கனமழை பெய்த அதுவும் குறிப்பாக மும்பை மாநகரில் பெய்த மழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் மும்பை மாநகரின் சாலையில் விழுந்த மிகப்பெரிய மரமானது வேரோடு பிடுங்கி எறியப்பட்டது. மேலும் அதன் அருகே இருந்த பெண்மணியும் நல்லவிதமாக உயிர்தப்பி இருந்தார்.strom

இந்நிலையில் இந்த புயலானது தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தை அதிகம் பாதிப்பதாக காணப்படுகிறது. மேலும் அங்கு பெய்த கன மழையால் பெரும்பாலான வீடுகளில் மழைநீர் சென்றது. கர்நாடகாவிலும் இந்த மழையை புயலானது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் குஜராத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிக சேதத்தை மரங்களும் பாதிப்பது மட்டுமின்றி அங்கு பல உயிரிழப்புகளும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு நிவாரண தொகையாக 1,000 கோடியை உடனடியாக ஒதுக்கீடு இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஒட்டுமொத்த புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தப்படி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு காயமுற்றோர் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க பாரத பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ஆணை பிறப்பித்துள்ளார். அந்த படி இந்த புயலால் உயிரிழந்தோருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் காயமுற்ற ஒன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆணை பிறப்பித்துள்ளார்.

From around the web