2.45 லட்சம் மற்றும் வாக்காளர் பட்டியல் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

கோவையில் அதிமுகவினர் இடமிருந்து 2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது!
 
2.45 லட்சம் மற்றும் வாக்காளர் பட்டியல் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பல கட்சி உறுப்பினர்கள் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதில் பலரும் பல்வேறு தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

money

தமிழகத்தில் எந்த ஒரு கூட்டணியும் இன்றி 234 தொகுதிகளிலும் தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது நாம் தமிழர் கட்சி. அதனை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.தமிழகத்தில் தேர்தலானது ஆணையமானது பல்வேறு விதிமுறைகளை விதித்து உள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பணப்பட்டுவாடா தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து தற்போது கோவையில் பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் வெளியானது. அதனால் தேர்தல் பறக்கும் படையினர் கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட சங்கனூர் பகுதியில் 2.45 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும்   அதிமுக உறுப்பினர்கள் இருவர் பணப்பட்டுவாடா செய்ததாகவும் அவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அரவிந்த் மற்றும் விஜேய் ஆகியோர், அவர்கள் கையில் இருந்த வாக்காளர் பட்டியலும் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

From around the web