அரியலூரில் ஆக்சிடென்ட்! சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி!3 பேர் படுகாயமடைந்து சிகிச்சை!

தமிழகத்தில் எங்கு சென்றாலும் எங்கு பார்த்தாலும் எதையாவது ஒரு செய்தியாக விபத்து செய்தி உள்ளது. மேலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் தொடர் சோகங்ககள் ஏற்படுகிறது. விபத்துகளில் அதிகமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து சில தினங்களாகவே தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அ என்ற எழுத்தில் தொடங்கும் மாவட்டமாக உள்ள அரியலூரில் தற்போது விபத்து ஏற்பட்டதாகவும் அதில் இரண்டு பேர் பலியானதாகவும் தகவல் வெளியானது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் இந்த விபத்தால் நடைபெற்றதாகவும் தகவல். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் அருகே ஆம்னி வேன் மற்றும் ஆட்டோ மோதியது. மேலும் இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற சந்திரா, பவுனம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. மேலும் ஆட்டோவில் வந்த மணிகண்டன் மற்றும் வேனில் வந்த 3 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி பெற்றுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.
இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பான சூழ்நிலையில் நிகழ்கிறது. மேலும் ஆட்டோவில் பயணித்த சந்திரா, பவுனம்மாள் குடும்பத்தில் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் சாலைகளில் பயணம் செல்கின்றனர்.