தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு தேதி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பாடங்கள் தொடங்கியது

மேலும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார், இந்த நிலையில் சற்று முன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும் தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 

இந்த பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தேதிகள் குறித்த விவரங்கள் இதோ: மே 3ம் தேதி மொழிப்பாடம், மே 5ம் தேதி ஆங்கிலத் தேர்வு, மே 7ம் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், மே 11ம் தேதி இயற்பியல், பொருளியல், மே 17ம் தேதி கணிதம், வணிகவியல், விலங்கியல், மே 19ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு மற்றும் மே 21ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

exam

From around the web