என்னது தமிழ்நாட்டுல நான்கு நாட்களில் 2.77 கோடி வசூலா?

தமிழகத்தில் கொரோனா விதிகளை மீறி, அவர்களிடம் நான்கு நாட்களில் 2.77 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது!
 
என்னது தமிழ்நாட்டுல நான்கு நாட்களில் 2.77 கோடி வசூலா?

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய், தெரியாத கிருமி என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது கொரோனா வைரஸ். கொரோனா தாக்கமானது முதன்முதலில் சீன நாட்டை கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தாக்கமானது கண்டறியப்பட்டது. இன்றளவும் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா உள்ளது என்பது மிகவும் வேதனையான செய்தி தான். குறிப்பாக இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தலைவிரித்தாடுகிறது.

corona

இந்தியாவில் குறிப்பாக மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் அனைவரும் வரிசையில் நின்று  ஜனநாயக கடமையாற்றினர் .

 மேலும் தேர்தல் முடிந்த சில தினங்களுக்குப் பின்னர் தமிழக அரசானது சில விதிகளை விதித்தது. அதன்படி திருமண நிகழ்ச்சிகளில்  100 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. மேலும் இறுதிசடங்கு ஊர்வலங்களில் 50 பேருக்கு மேல் அனுமதியை மறுத்துள்ளது .தியேட்டர்களில் 50 %பேர் மட்டுமே அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த விதிகள் ஆனது ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தமிழகம் சார்பில் அறிக்கை வெளியானது .

தற்போது காவல்துறையினர் சில தகவல்களை அளித்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் நான்கு நாட்களில் 2.77 கோடி அபராதம்  தகவல் வெளியானது. மேலும் ஏப்ரல் 8ஆம் தேதி இருந்து பதினோராம் தேதி வரை தனிநபர் இடைவெளியை பின்பற்றதவர்களிடமும் அபராதம் வசூலிக்க பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையை தவிர்த்து பிற இடங்களில் மட்டும் 2.52 கோடி வசூலிக்கப்பட்ட தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மாஸ்க் அணியாது தனிநபர் இடைவெளி பின்பற்றுவது தொடர்பாக 1.36 லட்சம் வழக்குகள் இதுவரை பதியப்பட்டுள்ளது.

From around the web