தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சிக்கியது 2 கோடி!

புதுச்சேரியில் தேர்தல் பறக்கும் படையினர் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 கோடியை பறிமுதல் செய்தனர்!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளன. இதில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி, பாஜக ,பாமக கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. மேலும் எதிர்க்கட்சியான திமுக கட்சி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது.

money

இந்நிலையில் தேர்தல் ஆணையம்  பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மேலும் இத்தேர்தலானது தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் நடைபெற உள்ளது. புதுச்சேரியிலும் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அங்கே தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இல்ல நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்து கொண்டு வருகின்றனர்.

 தற்போது புதுச்சேரியில் தேர்தல் பறக்கும் படையினர்  வாகன பரிசோதனை மேற்கொண்டனர். 2 கோடி ரூபாயை பிடித்தனர். 2 கோடி ரூபாய் ஆனது  தனியார் வங்கி வாகனத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டது என தகவல் வெளியானது. மேலும் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்றும் தெரியவந்தது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தினை பறிமுதல் செய்தனர்.

From around the web