ரஜினியின் 2.0: ரூ.400 கோடி கிளப்பில் இணைந்த முதல் தமிழ்ப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், லைகா நிறுவனம் தயாரித்த ‘2.0’ திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியானது. இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் வியாழன் முதல் ஞாயிறு வரையிலான நான்கு நாட்கள் வசூல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தின் உலகம் முழுவதுமான வசூல் ரூ.400 கோடியை தாண்டிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே ரூ.100
 
2.0

ரஜினியின் 2.0: ரூ.400 கோடி கிளப்பில் இணைந்த முதல் தமிழ்ப்படம்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், லைகா நிறுவனம் தயாரித்த ‘2.0’ திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியானது. இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் வியாழன் முதல் ஞாயிறு வரையிலான நான்கு நாட்கள் வசூல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த படத்தின் உலகம் முழுவதுமான வசூல் ரூ.400 கோடியை தாண்டிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்த படம் சனி மற்றும் ஞாயிறு மட்டுமே ரூ.225 கோடி வசூலாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் 4 நாள் வசூல், சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவைகளை சேர்த்தால் இந்த படத்தின் பட்ஜெட் தொகையான ரூ.550 கோடி வந்துவிட்டதாகவும் இனிவரும் வசூல் அனைத்தும் லாபம் என்றும் கூறப்படுகிறது.

From around the web