ஒரேநாளில் 1.89 லட்சம்! அதிரும் தூங்கா நகரம்!அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து 1.89 லட்சம் வசூலிக்க பட்டதாக தகவல்!
 
ஒரேநாளில் 1.89 லட்சம்! அதிரும் தூங்கா நகரம்!அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா தாக்கமானது அதிகரித்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தலைநகரமான சென்னையில் தினம் தினம் கொரோனா தாக்கமானது அதிகரித்து மக்களை வேதனைக்கு தள்ளுகிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு கோவை போன்ற  மாவட்டங்களிலும் கொரோனா தாக்கமானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் சார்பில் சில தினங்களுக்கு முன்பாக கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டன. அதன்படி முகக் கவசம் அணிவது கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம் என்றும் அறிவித்து இருந்தன.

mask

மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் அனுமதி இல்லை எனவும் தமிழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியானது.  தமிழக அரசால் தற்போது நாளைய தினம் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உள்ளது. இதற்காக தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுகின்றனர். அதன்படி தமிழகத்தில் தூங்காநகரம் அழைக்கப்படும் மதுரை மாநகரில் பொது இடங்களில் முக கவசஅணியாதவர்கள் இடமிருந்து அபராத தொகை வசூலிக்கப்பட்டது என கூறப்படுகிறது.

மேலும் மதுரையில் இன்று ஒரே நாளில் பொது இடங்களில் முக கவசம்  அணியாதவர்கள் இடமிருந்து 1.89 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவை ஒரே நாளில் வசூலிக்கப்பட்ட தாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. இது போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் வழக்குகளும் அபராதத் தொகையும் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் மக்களில் சிலர் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

From around the web