வெள்ள பாதிப்பு எதிரொலி: 24 மணி நேரம் பனைமரத்தின் உச்சியில் தவித்த இளைஞர்

ஒரிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரிசா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் வெள்ள பாதிப்பு காரணமாக பனை மரத்தில் ஏறி 24 மணி நேரம் இருந்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளது சந்திரன் பெஹாரா என்ற 18 வயது வாலிபர் வெள்ள
 

வெள்ள பாதிப்பு எதிரொலி: 24 மணி நேரம் பனைமரத்தின் உச்சியில் தவித்த இளைஞர்

ஒரிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரிசா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் வெள்ள பாதிப்பு காரணமாக பனை மரத்தில் ஏறி 24 மணி நேரம் இருந்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளது

சந்திரன் பெஹாரா என்ற 18 வயது வாலிபர் வெள்ள பாதிப்பு காரணமாக அதிலிருந்து தப்பிப்பதற்கு பனைமரத்தின் உச்சியில் ஏறி உள்ளார். அதன் பின்னர் அவர் வெள்ளம் வடிந்த பின் இறங்கலாம் என்று காத்திருந்த நிலையில் இருந்த அவருக்கு இறங்க முடியவில்லை. பயத்தின் காரணமாக மரத்திலேயே இருந்த அவர் குறித்த தகவல் மீட்பு படையினருக்கு அனுப்பப்பட்டது

உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்து 24 மணிநேரத்திற்கும் மேலாக பனை மரத்தில் உட்கார்ந்து இருந்த அந்த வாலிபரை மீட்டனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பு காரணமாக ஒருவர் 24 மணிநேரத்திற்கும் மேலாக பனை மரத்தில் வாலிபர் ஒருவர் உட்கார்ந்து இருந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

From around the web