மண்ணெண்ணெய் கொட்டியதால் குளிக்கப்போன 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: அதிர்ச்சி தகவல்

ஊட்டி அருகே உடலில் மண்ணெண்ணெய் கொட்டியதால் பாத்ரூமுக்கு குளிக்க சென்ற 18 வயது இளம்பெண் ஒருவர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஊட்டி அருகே கோத்தகிரி என்ற பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவரின் மகன் ரெனி ஷெர்ஷியா. இவர் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் லாக்டவுன் காரணமாக ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் உயரமான இடத்தில் இருந்த மண்ணெண்ணையை எடுக்க முயன்றுள்ளார். அப்போது
 
மண்ணெண்ணெய் கொட்டியதால் குளிக்கப்போன 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: அதிர்ச்சி தகவல்

ஊட்டி அருகே உடலில் மண்ணெண்ணெய் கொட்டியதால் பாத்ரூமுக்கு குளிக்க சென்ற 18 வயது இளம்பெண் ஒருவர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஊட்டி அருகே கோத்தகிரி என்ற பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவரின் மகன் ரெனி ஷெர்ஷியா. இவர் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் லாக்டவுன் காரணமாக ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் உயரமான இடத்தில் இருந்த மண்ணெண்ணையை எடுக்க முயன்றுள்ளார். அப்போது தடுமாறி மண்ணெண்ணெய் அவர் மீது விழுந்ததால் அவர் மீது மண்ணெண்ணை கொட்டிவிட்டது

இதனை அடுத்து அவர் குளிக்கச் சென்றார். இரவு நேரம் என்பதால் அதிக குளிர் இருந்ததால் அவர் ஹீட்டர் போட்டு குளிக்க வேண்டும் என்று முடிவு செய்த ஹீட்டர் சுவிட்சை ஆன் செய்தபோது திடீரென அதில் கிளம்பிய தீப்பொறி அவர் மீது பட்டது. ஏற்கனவே உடலெல்லாம் மண்ணெண்ணெய் கொட்டிஉஒருந்ததால் மிக வேகமாக அவருடைய உடலில் தீ பரவியது. இதில் அவர் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்து அலறினார்

அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கனவே 90% தீக்காயம் இருந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஹீட்டர் போட்டு குளிக்க முயன்ற 18 வயது இளம்பெண் தீப்பிடித்து மரணமடைந்தது அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது

From around the web