வரும் 18 விமானங்கள் செல்லும் 18 விமானங்கள் ரத்து!காரணம் இந்த ஆட்கொல்லி நோய்!

கொரோனா பரவல் காரணமாக பயணிகள் குறைந்ததால் 36 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்!
 
வரும் 18 விமானங்கள் செல்லும் 18 விமானங்கள் ரத்து!காரணம் இந்த ஆட்கொல்லி நோய்!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை மாறி தற்போது எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்ற நிலைமை உலக நாடுகள் அனைத்தும் தள்ளப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. அப்பேர்ப்பட்ட கொரோனா நட்பு நாடான சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் நோய் கண்டறியப்பட்டது. இந்தியாவிலும் கடந்த ஆண்டில் கொரோனா இருந்ததாக தெரிய வந்தது .ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவின் பெரும் முயற்சியினால் நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மீண்டும் கொரோனா அதிகரித்து, இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரம் தமிழகம் டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா உள்ளதால் அம்மாநில அரசுகள் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது.

corona

அதன்படி டெல்லியில் அரிப்பு வரும் வரை பள்ளிகள் மூடப்படும் என்றும் கூறியது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன.  தமிழகத்திலும் சில கட்டுப்பாட்டு விதிகள் இருக்கின்றன. அதன்படி பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் போன்றவைகள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னையில் விமான நிலையத்தில் பயணிகள் வருகை மிகவும் குறைந்தது 36 உள்நாட்டு சேவை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பயணிகள் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிற அதைத்தொடர்ந்து எண்ணிக்கை வெகுவாக சரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் வருகை மிகவும் குறைந்ததால் சென்னைக்கு வரும் 18 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய 18 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

From around the web