தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 18 மாவட்டங்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
 
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 18 மாவட்டங்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் கோடை காலம் என்றால் அனைவரும் முதலில் கூறுவது மே மாதம்தான். மே மாதம் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால்  தமிழகத்தில் வெயிலின் தாக்கமானது பல பகுதிகளில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிடும்.மேலும் பல பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம்  தலைவிரித்தாடும்.  சில தினங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

rain

மேலும் அதன்படி தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு இன்பமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதை தொடர்ந்து இதனை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த மாவட்டங்களில் தேனி திண்டுக்கல் தென்காசி கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மதுரை விருதுநகர் திருப்பூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

மேலும் நீலகிரி கோவை சேலம் நாமக்கல் புதுக்கோட்டை திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் வாழும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் மேலே குறிப்பிட்டுள்ள இந்த மாவட்டங்களில் சில தினங்களாக கனமழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாவட்டங்களின் கோடையின் வெப்பநிலையும் குறைக்கப்பட்டு உஷ்ணமும் நீங்க பட்டதாகவும் எண்ணி சந்தோஷத்துடன் மழையை வரவேற்கின்றனர்.

From around the web