கொரோனாவுக்கு பலியான 16 மாத குழந்தை: மருத்துவமனை முன் கதறி அழுத பெற்றோர்

 
கொரோனாவுக்கு பலியான 16 மாத குழந்தை: மருத்துவமனை முன் கதறி அழுத பெற்றோர்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 16 மாத குழந்தை ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்னரே ஆம்புலன்ஸ்லேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

16 மாத குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதை எடுத்து அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க பெற்றோர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை காலியாக இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர் 

baby

ஒரு மருத்துவமனையில் மட்டும் சில மணி நேரம் காத்திருந்தால் படுக்கை காலியாகும் என்று கூறப்பட்டதை அடுத்து மருத்துவமனை வாசலிலேயே ஆம்புலன்ஸ் உடன் காத்திருந்தார்கள். அப்போது சுமார் ஒன்றரை மணி நேரத்தில் அந்த குழந்தை இறந்துவிட்டது இதனை அடுத்து தங்கள் குழந்தைக்கு மருத்துவ உதவி கிடைக்காமலேயே பலியானதை நினைத்து அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் கதறி அழுத காட்சி அந்த பகுதியில் இருப்பவர்களை கண்ணீரை வரவழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web