இந்தியாவில் ஒரே நாளில் 1619 பேர் பலி! ஒரே நாளில் 2.73 லட்சம் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த ஒரு ஒரே நாளில் 2 73 810 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது!
 
இந்தியாவில் ஒரே நாளில் 1619 பேர் பலி! ஒரே நாளில் 2.73 லட்சம் பாதிப்பு!

தற்போது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திகண்ணுக்கு தெரியாமல் காணப்படுகிறது கொரோனா  நோய். இந்த  கொரோனா நோயானது உலகிலுள்ள பல நாடுகளிலும் தற்போது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையான ஒன்றாக காணப்படுகிறது. இந்நோயானது பெரியவர்கள் பலருக்கும் வருவது மிகுந்த சோதனை அளிப்பதாக உள்ளது. கொரோனா நோயானது இந்தியாவில் கடந்த ஆண்டில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

corona

ஆனால் தற்போது மீண்டும்  கொரோனா   அதிகரித்து உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவிலுள்ள உத்தரப் பிரதேசம் மகாராஷ்டிரம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் ஆனது மிகவும் அதிகரித்துள்ளது. இதற்காக ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் நடைமுறையில் உள்ளன. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைபடுத்த உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 இந்த ஆட்கொல்லி நோயான கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1619 பேர் உயிரிழந்ததாக  கூறப்படுகிறது. இதனால் இதுவரை இந்தியாவில் 178769 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இதனால் இந்தியாவில் நாளுக்கு நாள் இந்த கொரோனாவின் பாதிப்பானது 2 லட்சத்தை கடந்தது மக்களையும் அரசையும் மிகுந்த சோகத்தில் தள்ளியுள்ளது.

From around the web