சென்னையை அடுத்து செங்கல்பட்டில் எகிறும் கொரோனா; அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நகரங்களில் முதலிடத்தில் உள்ளது சென்னை மாவட்டம் தான். சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பதால் சென்னையில் இருந்து தப்பித்து பிற நகரங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இந்த நிலையில் சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாகி வருவது அம்மாவட்டத்தில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் இதுவரை 160 பேருக்கு கொரோனா புதிதாக உருவாகி
 
சென்னையை அடுத்து செங்கல்பட்டில் எகிறும் கொரோனா; அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நகரங்களில் முதலிடத்தில் உள்ளது சென்னை மாவட்டம் தான். சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பதால் சென்னையில் இருந்து தப்பித்து பிற நகரங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

இந்த நிலையில் சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாகி வருவது அம்மாவட்டத்தில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் இதுவரை 160 பேருக்கு கொரோனா புதிதாக உருவாகி இருப்பதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 160 பேர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,865 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 23 பேர்கள் கொரோனாவல்உயிரிழந்தனர் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1150 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 1531 பேர் கொரனோ தொற்று பாதிப்புடன் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

சென்னையை அடுத்த செங்கல்பட்டில் கொரனோ பாதிப்பு அதிகமாக இருப்பதால் இம்மாவட்டத்தில் விரைவில் தீவிர பொது முடக்கம் ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில்தான் தமிழகத்தில் அதிகபட்சமாக கொரனோ பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web