ஜிஎஸ்டி துறை அதிகாரிகளிடம் பிடிபட்ட ரூ.1.6 கோடி தங்க, வைர நகைகள்

கடந்த ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்னர் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு செய்து வருகின்றனர். அவ்வப்போது லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் இந்த சோதனையில் பிடிபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் இன்று ஒரு புகழ்பெற்ற நகைக்கடையில் சோதனை செய்தனர். பலமணி நேரம் நடந்த இந்த சோதனையின் முடிவில் ரூ.1.6 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை
 


ஜிஎஸ்டி துறை அதிகாரிகளிடம் பிடிபட்ட ரூ.1.6 கோடி தங்க, வைர நகைகள்

கடந்த ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்னர் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு செய்து வருகின்றனர். அவ்வப்போது லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் இந்த சோதனையில் பிடிபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் இன்று ஒரு புகழ்பெற்ற நகைக்கடையில் சோதனை செய்தனர். பலமணி நேரம் நடந்த இந்த சோதனையின் முடிவில் ரூ.1.6 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கைப்பற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த சோதனையின் முடிவில் இரண்டு நபர்களை கைது செய்து ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


From around the web