நிர்யபா கொலையாளிகளுக்கு டிசம்பர் 16ல் தூக்கு தண்டனை!

டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த குற்றம் நடைபெற்ற நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து இரண்டு சிறப்பு காவலர்கள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக செய்திகள்
 

நிர்யபா கொலையாளிகளுக்கு டிசம்பர் 16ல் தூக்கு தண்டனை!

டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த குற்றம் நடைபெற்ற நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து இரண்டு சிறப்பு காவலர்கள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கொலை வழக்கில் கைதான ஒருவர் மைனர் என்பதால் குறைந்த பட்ச தண்டனையை அனுபவித்து விடுதலை ஆகிவிட்டார். இன்னொருவர் தற்கொலை செய்து கொண்டு விட்டார். மீதி உள்ளவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web