தலைநகர் சென்னையில் 16 தொகுதிகள் 5911 வாக்குச்சாவடிகள்!

சென்னையில் 30 ஆயிரத்து 810 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!
 
தலைநகர் சென்னையில் 16 தொகுதிகள் 5911 வாக்குச்சாவடிகள்!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்தல்அதிகாரிகள் தங்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து தேர்தல் மையங்களுக்கும், வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தேர்தல் தலைமை அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார்.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

vote

இந்த வாக்குப்பதிவானது நாளை காலை தொடங்கி நாளை இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் தலைநகரமாக உள்ளது சென்னை .சென்னையில் 16 தொகுதிகள் உள்ளன.

மேலும் இந்த 16 சட்டமன்ற தொகுதிகளில் 5911 வாக்குச்சாவடிகள் உள்ளன. சென்னையில் உள்ள 5911 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரமானது பலத்த காவல்துறைதுணையுடன் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகிறது.  கொரோனா தடுப்பு மருந்துகளும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் தேர்தல் பணிக்காக 30810 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சென்னையிலுள்ள 5911 வாக்குச்சாவடிகளில் 650 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆக உள்ளன. மேலும் 150 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமாக காணப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

From around the web