150 கோடி கணக்கில் காட்டப்படாத பணம், ரூ. 5 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை அதிரடி 

 

தமிழகத்தில் ஒருசில இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதில் 150 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களும் ரூபாய் 5 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் உள்ள ஈரோடு கோவை மாவட்டங்களில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர் என்ற தகவல் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழகத்தில் 22 இடங்களில் நீடித்துவரும் சோதனையில் இதுவரை 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ரூபாய் 150 கோடி கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

மாணவர்களிடம் அதிக தொகை வசூலித்து விட்டு குறைவான தொகைக்கு கணக்கு காட்டியது இந்த சோதனைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரூ.150 கோடி அளவிற்கு கணக்கில் காட்டப்படாத முதலீடு பரிவர்த்தனை கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web