கோவாவில் நிர்வாண பார்ட்டி: 15 பெண்களும் கலந்து கொள்வதாக தகவல்

பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறிப்போவதை சமூக ஆர்வலர்கள் கவலையுடன் நோக்கி வரும் நிலையில் கோவாவில் உள்ள ஒரு இடத்தில் நிர்வாண பார்ட்டி நடக்கவிருப்பதாக ஆங்காங்கே போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களும் விளம்பரங்களும் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கோவாவின் வடக்குப் பகுதியில், நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாகவும் இந்த பார்ட்டியில் 15 வெளிநாட்டு பெண்களும் ஒருசில இந்திய பெண்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் பார்ட்டி நடக்கும் இடம் குறித்த
 

கோவாவில் நிர்வாண பார்ட்டி: 15 பெண்களும் கலந்து கொள்வதாக தகவல்

பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறிப்போவதை சமூக ஆர்வலர்கள் கவலையுடன் நோக்கி வரும் நிலையில் கோவாவில் உள்ள ஒரு இடத்தில் நிர்வாண பார்ட்டி நடக்கவிருப்பதாக ஆங்காங்கே போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களும் விளம்பரங்களும் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோவாவின் வடக்குப் பகுதியில், நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாகவும் இந்த பார்ட்டியில் 15 வெளிநாட்டு பெண்களும் ஒருசில இந்திய பெண்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் பார்ட்டி நடக்கும் இடம் குறித்த சரியான தகவல் அந்த போஸ்டரில் இல்லை

இதுகுறித்து போலீசாரின் கவனத்திற்கு வந்ததும் உஷாரான போலீசார், தங்கள் சோதனையை செய்து வருவதாகவும் இதுபோன்ற நிர்வாண பார்ட்டியை எந்த காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

From around the web