அப்பா அம்மா இறந்தவுடன் 15 வயது சிறுமிக்கு தெரியவந்த மிகப்பெரிய உண்மை: சினிமா போல் ஒரு ஆச்சரிய சம்பவம்

அப்பா அம்மா இறந்த உடன் சிறுமிக்கு தனது உண்மையான பெற்றோர் குறித்த தகவல் தெரிய வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது புதுக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் துர்கா தேவி தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. துர்கா தேவி என்ற இந்த பெண் குழந்தையை அவர்கள் ஆசையுடன் வளர்த்து வந்த நிலையில் திடீரென இருவரும் உடல் நலம் என்று இருந்தனர் அப்போது துர்கா தேவியின் தந்தை சுப்பிரமணியன் துர்க்கா தேவியை அழைத்து நாங்கள் உன்னுடைய உண்மையான பெற்றோர் அல்ல
 

அப்பா அம்மா இறந்தவுடன் 15 வயது சிறுமிக்கு தெரியவந்த மிகப்பெரிய உண்மை: சினிமா போல் ஒரு ஆச்சரிய சம்பவம்

அப்பா அம்மா இறந்த உடன் சிறுமிக்கு தனது உண்மையான பெற்றோர் குறித்த தகவல் தெரிய வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புதுக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் துர்கா தேவி தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. துர்கா தேவி என்ற இந்த பெண் குழந்தையை அவர்கள் ஆசையுடன் வளர்த்து வந்த நிலையில் திடீரென இருவரும் உடல் நலம் என்று இருந்தனர்

அப்போது துர்கா தேவியின் தந்தை சுப்பிரமணியன் துர்க்கா தேவியை அழைத்து நாங்கள் உன்னுடைய உண்மையான பெற்றோர் அல்ல என்றும், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தான் உன்னுடைய உண்மையான பெற்றோர் இருப்பதாகவும் அவருடைய பெயர் மற்றும் முகவரியையும் அவர் கொடுத்துள்ளார்

துர்கா தேவியின் பிறப்பு குறித்து உண்மையை கூறிய பெற்றோர்கள் அதனை அடுத்த சில நாட்களில் இறந்து விட்டனர். இந்த நிலையில் வளர்த்த பெற்றோர் தன்னை தன்னை விட்டுப் பிரிந்த நிலையில் பெற்ற பெற்றோரிடம் சேர அவர் முடிவு செய்தார்

இதனை அடுத்து திருச்சி மாவட்டம் மணப்பாறை சென்று தனது உண்மையான பெற்றோர்களை கண்டுபிடித்து தரும்படி காவல் நிலையத்தில் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து களமிறங்கிய காவல்துறையினர் மணப்பாறை அருகே உள்ள ராஜபட்டி என்ற பகுதியை சேர்ந்து துர்காதேவியின் உண்மையான தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரையும் கண்டு பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்

அவர்களிடம் 15 வருடங்களுக்கு முன் தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தை குறித்த விவரத்தை கேட்டறிந்து அந்த விவரங்கள் உறுதி செய்யப்பட்டவுடன் துர்காதேவியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர். 15 வருடங்களுக்கு முன் தத்துக் கொடுத்த தங்களது மகள் மீண்டும் தங்களுக்கே கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்

பெற்ற பெற்றோர்களுடன் நிம்மதியான வாழ்க்கையை நடத்துமாறும் நன்றாக படிக்குமாறும் காவல்துறையினர் துர்க்காதேவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web