இந்தியாவில் ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு: உலக அளவில் முதலிடம்

 
இந்தியாவில் ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு: உலக அளவில் முதலிடம்


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.5 லட்சம் பேர்களுக்கும் மேல் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமாகி 90,584 பேர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 839 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

corona

இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,355,465 எனவும், இந்தியாவில் பலியானோர் மொத்த எண்ணிக்கை 169,305 எனவும், குணமானோர் மொத்த எண்ணிக்கை 12,078,333 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த எண்ணிக்கை இதோ;

11 ஏப்ரல்: 1,52,879 
10 ஏப்ரல்: 1,45,384
09 ஏப்ரல்: 1,31,968 
08 ஏப்ரல்: 1,26,789 
07 ஏப்ரல்: 1,15,736
06 ஏப்ரல்: 96,982
05 ஏப்ரல்: 1,03,558
04 ஏப்ரல்: 93,249
03 ஏப்ரல்: 89,129
02 ஏப்ரல்: 81,466
01 ஏப்ரல்: 72,330
31 மார்ச் : 53,480

From around the web