அதிகாலையில 15 பேர் பலி! நள்ளிரவில 13 பேர் பலி!! தொடரும் சோகம்!!!

ஆக்சிசன் தட்டுப்பாட்டால் கோவாவில் மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
அதிகாலையில 15 பேர் பலி! நள்ளிரவில 13 பேர் பலி!! தொடரும் சோகம்!!!

தற்போது நாடெங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை பல்வேறு மாநிலங்களில் காணப்படுகிறது. இந்த பற்றாக்குறை ஏனென்றால் தற்போது நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதனால் கொரோனாசிகிச்சை அளிக்கும் போது அவர்கள் மூச்சுத்திணறலால் உயிரை இழக்காமல் இருக்க அவர்கள் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. மேலும் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாநோயின் தாக்கம் அதிகரிப்பதால் பல பகுதிகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.oxygen

இதனால் இந்த ஆக்சிஜன்  பற்றாக்குறையும் பல பகுதிகளில் நிலவுகிறது. மேலும் ஆக்சிசன் பற்றாக்குறையினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தற்போது இந்த ஆக்சிஜன்  தட்டுப்பாட்டினால் கொரோனா  நோயாளிகள் 13 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சோகம் என்னவென்றால் வியாழக்கிழமை அதிகாலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 15 பேர் உயிரிழந்த நிலையில் நள்ளிரவில் மேலும் 13 பேர் மாண்டு உள்ளனர்.

அதேபோல் கோவா  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கோவாவில் ஆக்சிசன் தடுப்பான் தட்டுப்பாட்டால் அடுத்தடுத்து நோயாளிகள் உயிரிழப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவா மட்டுமின்றி இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களிலும் இந்த ஆக்சிஜன்   தட்டுப்பாடு அதிகரித்துள்ளது மேலும் இந்த கொரோனா நோயின் தாக்கமும் பல பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

From around the web