ஆரணியில் ஹோட்டலில் "கெட்டுப்போன 15 கிலோ சிக்கன்!!!"

ஆரணியில் மேலும் ஒரு ஹோட்டலில் கெட்டுப்போன 15 கிலோ சிக்கன் இருந்தது கண்டுபிடித்தது
 
chicken

தற்போது எல்லாவற்றிலும் கலப்படம் என்ற நிலை நம் தமிழகத்தில் அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது அதிகமாக நிலவுகிறது, குறிப்பாக இறைச்சி கடைகளில் அதிகம் கலப்படம் நிகழ்வதும் தெரியவருகிறது. அதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு ஹோட்டல்களில் கெட்டுப்போன உணவுகள் என கண்டு கொள்ளாமல் விற்பனை செய்வதும் அவ்வப்போது சோதனையில் கண்டறியப்படுகிறது.chicken

அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியில் மேலும் ஒரு ஹோட்டலில் 15 கிலோ கெட்டுப்போன சிக்கன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சமைப்பதற்காக ஃபிரிட்ஜில் வைத்திருந்த சிக்கனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை அழித்தனர். மேலும் செவன் ஸ்டார் ஹோட்டல் அருகே கெட்டுப்போன  சிக்கன்  வைத்திருந்த 5 ஸ்டார்  சென்டருக்கு நோட்டீஸ் ஓட்டினார்.

மேலும் ஆரணி ஓட்டலில் சிக்கன் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிப்பு என மேலும் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு முன்பாக 17 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் மேல் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web