அரசு மருத்துவமனைகளில் 15! தனியார் மருத்துவமனைகளில் 18 உயிர்பலி!

கொரோனா நோயின் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது!
 
அரசு மருத்துவமனைகளில் 15! தனியார் மருத்துவமனைகளில் 18 உயிர்பலி!

தமிழக மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக தற்போது காணப்படுகிறது கொரோனா நோய். இந்த கொரோனா நோயானது கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் கட்டுப்பாட்டிற்கு வந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக எழுந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் பல பகுதிகளில் இதற்காக கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்குகளும் நடைமுறையில் உள்ளன. இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேசம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கமானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாக காணப்படுகிறது.

corona

மேலும் தமிழகத்திலும் நோயின் தாக்கம் ஆனது சில தினங்களாக அதிகரித்து மக்களை  வேதனை அளிக்கிறது. தற்போது கொரோனா நோயின் தாக்கம்  பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நோயினால் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த 33 பேரில் அரசு மருத்துவமனைகளில் 15 பேரும் இறந்ததாகவும் கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் 18 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கொரோனா வால் பாதிக்கப்பட்ட நோய்கள் எதுவும் இல்லாமல் மாரடைப்பு ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உயிரிழப்புகள் எண்ணிக்கையானது தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்து வேதனையை கொடுக்கிறது.

From around the web