வாக்குச்சாவடிக்கு 15 முழுஉடல் கவச உடைகள் கவசங்கள் தயார்நிலை தேர்தல் ஆணையம் தகவல்!

கொரோனா நோயாளிகள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் முன்னேற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் தேர்தல் தலைமை அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதா சாகு. மேலும் அவர் சில தினங்களாக செய்தியாளரிடம் சந்தித்து சில தவகல்களையும் வெளியிட்டார்.மேலும் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன பரிசோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

corona

இந்நிலையில் சில தினங்களாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்திலும் வேதனையிலும் உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால் கொரோனா  தாக்கம் அதிகரித்து மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்துள்ளது. வாக்களிப்பது ஜனநாயக உரிமை என்பதால் தேர்தல் ஆணையம் ஆனது தற்போது கொரோனா  நோயாளிகளுக்கான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி கொரோனா நோயாளி வாக்களிக்க வாக்குசாவடி ஒன்றுக்கு 15 முழு உடல் கடைசி கவச உடை கவசங்களும் தயாராக இருப்பதாகவும்  கூறியுள்ளது. அவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு வந்தால் தன்னார்வலர்கள் உதவி செய்வார்கள் எனவும் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

From around the web