நாளை முதல் மீண்டும் 144 தடை உத்தரவு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரனோ வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் ஓரளவு கொரனோ வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் டெல்லி ராஜஸ்தான் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரனோ வைரஸ் இரண்டாம் அலை பரவுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கூட நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரனோ வைரஸ் அதிகரித்துவரும் மாநிலங்களில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனை உறுதி செய்வது போல் சற்று முன் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது 

rajastan lockdown

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரனோ வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அடுத்தே 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு விளக்கம் அளித்தது. நாளை முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாகவும் தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே அந்தாள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது 

ஆறு மாதங்களாக 144 தடை உத்தரவில் சிக்கியிருந்த பொதுமக்கள் தற்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மீண்டும் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல் என்ற அறிவிப்பால் ராஜஸ்தான் மாநில மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

From around the web