144 தடை உத்தரவு குறித்து விளக்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரி!

புதுச்சேரியில்  144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது என்றும் விளக்கமளிக்கும் பூர்வால் கால்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆகிய நாளையதினம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.இந்த 234 தொகுதிகளிலும் நாளைய தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தல் ஆனது தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இந்த 30 தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது.

pudhucherry

புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று மாலை 7 மணி முதல் ஏழாம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவை போடப்பட்டுள்ளது. வாக்குபதிவினை குறைக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் கூறுகின்றனர். மேலும் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 144 தடை குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கவில்லை என்றால் அது ரத்து செய்யப்படும் எனவும் உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரி போடப்பட்டுள்ள 144 தடை எனது வாக்கு பதிவினை பாதிக்காது எனவும் தேர்தல் அதிகாரி  விளக்கமளித்துள்ளார்.

மேலும் மக்களின் சகஜ வாழ்க்கையை தடையுத்தரவு பாதிக்காது எனவும் அவர் கூறினார். மேலும் அவர் குடும்பமாகவும் நண்பர்களுடன் சேர்ந்து வாக்களிக்க தடை இல்லை எனவும் அவர் கூறினார் சட்டவிரோதமாக கூட்டம் கூடுவது தடுக்கவே தடை பிறப்பித்துள்ளது விளக்கம் அளித்துள்ளார்.

From around the web