கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 கொரோனா நோயாளிகள் கைது

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு கொரோனா நோயாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது டெல்லியில் உள்ள சர்தார்பூர் என்ற பகுதியில் ஆயிரம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் ஒரு கொரோனா வார்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வார்டில் 14 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று கழிவறைக்கு சென்றபோது
 

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 கொரோனா நோயாளிகள் கைது

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு கொரோனா நோயாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டெல்லியில் உள்ள சர்தார்பூர் என்ற பகுதியில் ஆயிரம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் ஒரு கொரோனா வார்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வார்டில் 14 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று கழிவறைக்கு சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற இரண்டு கொரோனா நோயாளிகள் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது

இதனை அடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று உயிருக்கு போராடும் நிலையிலும் பாலியல் தொல்லை செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இதுகுறித்து கருத்து தெரிவித்த நெட்டிசன்கள் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொரோனா நோயாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்

From around the web