மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் 1330 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!

மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் 26,97,682 வாக்காளர்கள் உள்ளனர்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. அதற்காக தேர்தல் ஏற்பாடுகள் ஆனது தமிழகத்தில் மிகவும் தீவிரமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.234 தொகுதிகள்  பல வாக்குச்சாவடிகள் உள்ளன.இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

madurai

மதுரையில் மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன. இந்த 10 தொகுதிகளிலும் தேர்தல் வேலைகளில் மிகவும் தீவிரமாக நடைபெறுகிறது. மதுரையில் மொத்தம் 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் மதுரை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் மதுரை கிழக்கு பகுதியில் உள்ளனர். மேலும் சோழவந்தானில் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர்

இதில் மாவட்டம் முழுவதும் 2716 மையங்கள் 3856 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த 3856 வாக்குச்சாவடிகளில் 1330 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை காணப்படுகிறது.. மேலும்   பதற்றமான  வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல் துறையினர், வெப் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர். மதுரையின் 5021 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3856 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3856 விவிபேட் பயன்படுத்தப்பட்டுள்ளன.

From around the web