7 நாட்களில் 1200 கி.மீ சைக்கிளில் பயணித்த மாணவி.. இந்திய சைக்கிள் பந்தய பயிற்சியாளராகும் வாய்ப்பு!!

கொரோனா வைரஸ் வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களையே போதும் போதும் என்று வெச்சு செய்கிற நிலையில் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட வளரும் நாடுகளுக்கு கொரோனா மட்டுமல்லாது வறுமையும் மற்றொரு புறம் குடைச்சலை கொடுத்து வருகின்றது. கொரோனாத் தொற்று மார்ச் மாதம் இந்தியாவில் கால் பதித்த நிலையில், கட்டுக்குள் கொண்டுவர் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது, 15 நாட்களேதானே ஊரடங்கு என சொந்த ஊர் திரும்பாமல் ஆங்காங்கே
 
7 நாட்களில் 1200 கி.மீ சைக்கிளில் பயணித்த மாணவி.. இந்திய சைக்கிள் பந்தய பயிற்சியாளராகும் வாய்ப்பு!!

கொரோனா வைரஸ் வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களையே போதும் போதும் என்று வெச்சு செய்கிற நிலையில் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட வளரும் நாடுகளுக்கு கொரோனா மட்டுமல்லாது வறுமையும் மற்றொரு புறம் குடைச்சலை கொடுத்து வருகின்றது.

கொரோனாத் தொற்று மார்ச் மாதம் இந்தியாவில் கால் பதித்த நிலையில், கட்டுக்குள் கொண்டுவர் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது, 15 நாட்களேதானே ஊரடங்கு என சொந்த ஊர் திரும்பாமல் ஆங்காங்கே வேலை பார்த்துவந்த மக்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட, பண வசதி இல்லாத காரணத்தால் உணவிற்கு வழி இன்றி தவிக்கத் துவங்கினர்,

இதனால் பலரும் தங்களது சொந்த ஊர் நோக்கிப் பயணம் செய்தனர். சிலர் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடைபயணம், சைக்கிள் பயணம் என பலநூறு கிலோமீட்டர்களைக் கடந்தனர்.

7 நாட்களில் 1200 கி.மீ சைக்கிளில் பயணித்த மாணவி.. இந்திய சைக்கிள் பந்தய பயிற்சியாளராகும் வாய்ப்பு!!

அந்தவகையில் அரியானாவில் உள்ள குருகிராமில் ஆட்டோ டிரைவர் ஒருவரின் மகள் அவரது தந்தையை சைக்களில் வைத்து 1200 கி.மீ பயணம் செய்து சொந்த ஊரை 7 நாட்களில் அடைந்துள்ளார்.

அவரது தந்தைக்கு விபத்து ஏற்பட்டதால், அவரால் சைக்கிளை ஓட்ட முடியவில்லை. 8 ஆம் வகுப்பு படிக்கும் ஜோதி குமாரியின் இந்த செயலுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு, ஜோதி குமாரிக்கு முறையாக பயிற்சி அளித்து தேசிய போட்டிகளில் பங்கேற்க செய்வதற்கு முன் வந்தது.

மேலும் அவரை டெல்லிக்கு அழைத்து சென்று தேசிய அகாடமியில் பயிற்சி அளித்து பயிற்சியாளராக வாய்ப்பு அளிக்க அணுகியபோது, பள்ளிப் படிப்பினை முடிக்க வேண்டும் என்று கூறி நிராகரித்துள்ளார்.

From around the web