12 ரயில் சேவைகள் ரத்து! சோகத்தில் தெற்குரயில்வே! காரணம் கொரோனாஅச்சம்!

கொரோனா காரணமாக பயணிகள் வருகை குறைவால் 12 சிறப்பு ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளது தெற்கு ரயில்வே!
 
12 ரயில் சேவைகள் ரத்து! சோகத்தில் தெற்குரயில்வே! காரணம் கொரோனாஅச்சம்!

இந்தியாவில் விலை குறைவாகவும் விரைவாகவும் பயணம் செய்யும் ஒரு போக்குவரத்து என்றால் அதனை ரயில்வே போக்குவரத்து என்று சொல்லலாம். மேலும் தனது மக்களுக்கு உதவும் வண்ணமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. தற்போது மக்களிடையே கொரோனா அதிகம் காணப்படுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டன.  தெற்கு ரயில்வே சார்பில் சில அறிவிப்புகளும் சில தினங்கள் முன்பாக அறிவிக்கப்பட்டன. அவற்றில் சளி காய்ச்சல் இருமல் போன்றவைகள் இருந்தால் பயணிகள் பயணம் செல்வதை தவிர்க்க வேண்டுகோள் விடுத்திருந்தது.railway

மேலும் இதுபோன்ற தேவையற்ற பயணங்களை அல்லது கூட்டமாக பயணம் செய்வதை தவிர்க்கவும் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில்தற்போது சில அறிவிப்புகளையும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. அதன்படி காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் 12 சிறப்பு ரயில்கள்மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் இராமேஸ்வரம் முதல் குமரி வரை வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் சனி, திங்கள், புதன் நாட்களில் மே 1 ஆம் தேதி முதல் ரத்து செய்துள்ளது.

மேலும் குமரி முதல் ராமேஸ்வரம் வரை வாரம் மும்முறை சிறப்பு ரயில் ஞாயிறு, செவ்வாய், வியாழக் கிழமைகளில் ரத்து செய்துள்ளது. மேலும் கோவை கேஎஸ்ஆர் பெங்களூர் சிறப்பு ரயில் புதன் தவிர அனைத்து நாட்களிலும் ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. மேலும் பெங்களூரு முதல் கோவை சிறப்பு ரயில் தவிர அனைத்து நாட்களிலும் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளது தெற்கு ரயில்வே. மேலும் சென்னை சென்ட்ரல் முதல் மைசூர் சதாப்தி சிறப்பு ரயில் புதன் தவிர அனைத்து நாட்களிலும் இரு மார்க்கத்திலும் ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிரடியாக கூறியுள்ளது.

மேலும் சென்னை சென்ட்ரல் முதல் கோவை சிறப்பு ரயில் இரண்டு மார்க்கத்திலும் செவ்வாய் தவிர அனைத்து நாட்களிலும் ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் ரத்து செய்துள்ளது. தெற்கு ரயில்வே எர்ணாகுளம் முதல் பனஸ்வாடி வரை வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மே 3ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கூறியுள்ளது. மேலும் பனஸ்வாடி முதல் எர்ணாகுளம் வரை வாரம் இருமுறை சிறப்பு ரயில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மே 3 ஆம் தேதி முதல் ரத்து கூறியது. இதனால் இந்த 12 ரயில் சேவைகளும் தற்போது தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web