11 வயது பள்ளி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை: காதல் பிரச்சனையா?

 

ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது பள்ளி மாணவி காதல் பிரச்சனை காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிவகிரிபட்டி என்ற பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவனை காதலித்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர்கள் அந்த மாணவியைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் இதுகுறித்து மாணவிக்கும் மாணவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதனால் அந்த மாணவியை அந்த மாணவன் அடித்ததாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவி வீட்டிற்கு சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது 

இதனை அடுத்து மாணவியை அடித்த மாணவன் தலைமறைவாக இருப்பதாகவும் அந்த மாணவனை காவல்துறை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 11 வயது மாணவியை 16 வயது மாணவன் காதலித்ததும் இதனால் ஒரு தற்கொலை நிகழ்ந்துள்ளதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web