தமிழக முதல்வர் தொடங்கி வைத்த 1100 சேவை: முழுவிபரங்கள்

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்று முன்னர் 1100 என்று அரசு சேவை எண் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டம் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள 1100 என்ற திட்டம் மின் துறை, சுகாதாரத் துறை, பொது விநியோகம் துறை, முதியோர் நலம், கல்வி, வருவாய் துறை, உள்ளாட்சி துறை, மகளிர் நலம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் ஒட்டுமொத்தமாக இணைக்கப்பட்டுள்ளது 

1100 service

1100 என்ற எண்கள் எண்ணிற்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தங்களுடைய குறைகளை பொதுமக்கள் இந்த எண்ணில் பதிவு செய்யலாம். இந்த குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நிவர்த்தி செய்தவுடன் மனுதாரருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்

பொதுமக்கள் இந்த திட்டத்தை இணையதளம், சமூக ஊடகங்கள், கைபேசி செயலிகள் மூலம் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு அவரவர் இருந்த இடத்தில் இருந்தே குறைகளை பதிவு செய்து கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணம் இல்லாமல் 110 என்ற எண்ணின் வாயிலாக இருப்பிடத்தில் இருந்தபடியே குறைகளுக்கு நிவாரணம் பெற்று விடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது

From around the web