காணாமல் போன 11 மீனவர்கள் மீட்பு!மே 3ஆம் தேதி திரும்புவர்!

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து லட்சத் தீவு கடலில் படகுடன் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்க பட்டதாக கூறப்படுகிறது
 
காணாமல் போன 11 மீனவர்கள் மீட்பு!மே 3ஆம் தேதி திரும்புவர்!

தற்போது உலகில் மூன்று விதமான போக்குவரத்துக்கள் உள்ளன. அவற்றில் கடல்வழிப் போக்குவரத்து வான்வழி போக்குவரத்து தரைவழி போக்குவரத்து ஆகும். இதில் கடல்வழிப் போக்குவரத்து பல்வேறு கண்டங்களுக்கு தேவையான சரக்குகள் போன்றவைகள் கனமான பொருட்கள் போன்றவை இந்த கடல் வழிப் பாதையின் மூலம் கொண்டுசெல்லப்படும். மேலும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆனது முக்கடல் சந்திக்கும் பகுதியாக உள்ளது. மேலும் இங்கு மீன்பிடித் தொழிலும் மிகவும் பெயர் பெற்றதாக காணப்படும். கன்னியாகுமரி இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 பேர் சில தினங்களாக காணவில்லை என்ற தகவல்வெளியானது.fisher

இந்நிலையில் அந்த 11 பேர் தற்பொழுது மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து லட்சத்தீவு கடலில் தத்தளித்த அந்த 11 பேர் மீனவர்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது .தேங்காய் பட்டணத்திலிருந்து கடந்த 6ஆம் தேதி ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்ற 11 மீனவர்கள் கரை திரும்பவில்லை இதனால் 11 மீனவர்கள் கரை திரும்புவது குறித்து இந்திய கடலோர காவல் படைக்கு தமிழக அரசு தகவல் கொடுத்தது. தமிழக அரசின் தகவலை அடுத்து கடந்த 21ம் தேதி முதல் கடற்படையின் ரோந்து விமானம் உதவியுடன் ஆழ்கடலில் மீனவர்களை தேடும் பணி நடந்தது.

மேலும் அவர்கள் 4 நாட்கள் தேடியதாகவும் கூறப்பட்டது. நான்கு நாட்கள் தேடியதை பின்னர் லட்சத்தீவில் இருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் படகு ஒன்று தத்தளித்தது தெரியவந்தது. மேலும் அந்த படகில் இருந்த இயந்திரம் பழுதடைந்ததால் படகில் 16 மீனவர்களும் பத்திரமாக இருப்பது குறித்து கடலோர காவல்படை தற்போது தகவல் அளித்துள்ளது. மேலும் லட்சத்தீவில் இருந்து 370 கிலோ மீட்டர் தொலைவில் தத்தளித்த 11 மீனவர்களும் கடலோர காவல் படையால் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த மீனவர்களின் குடும்பத்தினர் சந்தோசம் அணிந்துள்ளனர். மேலும் கடலோர காவல் படை உதவியுடன் மீட்கப்பட்ட மீனவர்கள் பழுதடைந்த படகுடன் மே 3-ஆம் தேதி வரை திரும்புவர் எனவும் கூறப்படுகிறது .இதனால் மீனவர்கள் தாங்கள் கொண்டு சென்ற படகு மீண்டும் திரும்புவதாக கூறப்பட்டுள்ளது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வண்ணமாக காணப்படுகிறது.

From around the web