11 பேர் உயிரிழப்பு! இந்தமுறை ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை,வேறு காரணம்!

மருத்துவமனையில் ஆக்சிசன் நிரப்பும்போது கசிவு ஏற்பட்டு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது!
 
11 பேர் உயிரிழப்பு! இந்தமுறை ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை,வேறு காரணம்!

தற்போது உலகமே கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி நோயான கொரோனாக்கு எதிராக போராடுகிறது. இந்த கொரோனா நோயானது இந்தியாவில் கடந்த ஆண்டில் வரத் தொடங்கி கடந்த ஆண்டின் இறுதியில் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் சில தினங்களாக இந்நோயின் தாக்கம் ஆனது மீண்டும் அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. குறிப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் இரண்டாவது அலையாக  எழுந்துள்ளது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. மேலும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன.

death

எனினும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஆனது தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.மேலும் கொரோனா  சிகிச்சை அளித்தவர்களுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிசன் தட்டுப்பாடும் சில தினங்களாக இந்தியாவில் நிலவுகிறது வெளிவந்தது. குறிப்பாக டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது கூறப்பட்டன. இந்நிலையில் தற்போது அதனால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்தமுறை ஆக்சிஜன்  தட்டுப்பாட்டினால் உயிரிழக்கவில்லை.ஆக்சிஜன்நிரப்பும் போது உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் மக்களிடையே மிகுந்த கஷ்டத்தை உருவாகியுள்ளது மேலும் சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மருத்துவமனையில் டேங்கரில் ஆக்ஸிஜன் வாயு கசிவால் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து ஆக்சிஜன்  நிரப்பும் போது ஏற்பட்ட விபத்தில் பரிதாபம் நிகழ்ந்ததாக காணப்படுகிறது.மேலும் ஆக்சிசன் வாயுக் கசிவை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களை கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மகாராஷ்டிர அமைச்சர். மேலும் டேங்கர் இன் வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

From around the web