ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்: போஸ்டர் அடித்து கொண்டாடிய 10ஆம் வகுப்பு மாணவன்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்று ஏளனமாக பேசிய ஆசிரியர்களுக்கு என்னுடைய வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்று பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் போஸ்டர் அடித்து முகநூலில் பதிவு செய்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் என்ற பகுதி அருகே நிஷாந்த் என்ற மாணவர் பத்தாம் வகுப்பு
 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்று ஏளனமாக பேசிய ஆசிரியர்களுக்கு என்னுடைய வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்று பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் போஸ்டர் அடித்து முகநூலில் பதிவு செய்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் என்ற பகுதி அருகே நிஷாந்த் என்ற மாணவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியலையும் பெற்றுள்ளார்

இதனை அடுத்து தான் பத்தாம் வகுப்பு தேர்வில் பாஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று ஏளனம் செய்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்று அவர் மகிழ்ச்சியுடன் போஸ்டரை அமைத்து அதனை முகநூலில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web