ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்ட 10ஆம் வகுப்பு மாணவன்

ஆன்லைன் வகுப்பை கவனிக்க பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவர் ஒருவர் கடலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், ஆன்லைன் வகுப்பை கவனிக்க செல்போன்
 

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்ட 10ஆம் வகுப்பு மாணவன்

ஆன்லைன் வகுப்பை கவனிக்க பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவர் ஒருவர் கடலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், ஆன்லைன் வகுப்பை கவனிக்க செல்போன் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டு உள்ளார்

ஆனால் செல்போன் வாங்கித் தரும் அளவிற்கு தங்களிடம் பணம் இல்லை என பெற்றோர்கள் கூறியதாவது கூறியதாக தெரிகிறது. இதனால் மன விரக்தி அடைந்த அந்த மாணவர் செல்போன் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியாதது குறித்து கவலை அடைந்துள்ளார்

இந்த நிலையில் பெற்றோர் செல்போன் வாங்கி தராத விரக்தியில் திடீரென தூக்கில் தொங்கி அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கடும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் கதறி அழுத காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இந்த நிலையில் ஆன்லைன் கல்வி திட்டத்திற்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெற்றோர் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், ஆன்லைன் கல்வியால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்று மனித உரிமைகள் ஆணையம் விரைவில் விசாரணை செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web