ஹால் டிக்கெட் வாங்க டுவீலரில் சென்ற 10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபத்து: அதிர்ச்சி தகவல்

பத்தாம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சென்று தங்களுடைய ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ஏர்வாடி என்ற பகுதி அருகே உள்ள சிங்கநேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த காவ்யா என்ற பத்தாம் வகுப்பு மாணவி, ஹால் டிக்கெட் வாங்குவதற்காக தனது மாமா கண்ணன் என்பவருடன் டூவீலரில் சென்றார். அவருடன் கண்ணனின் மகன் மற்றும் அவரது
 
ஹால் டிக்கெட் வாங்க டுவீலரில் சென்ற 10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபத்து: அதிர்ச்சி தகவல்

பத்தாம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சென்று தங்களுடைய ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ஏர்வாடி என்ற பகுதி அருகே உள்ள சிங்கநேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த காவ்யா என்ற பத்தாம் வகுப்பு மாணவி, ஹால் டிக்கெட் வாங்குவதற்காக தனது மாமா கண்ணன் என்பவருடன் டூவீலரில் சென்றார். அவருடன் கண்ணனின் மகன் மற்றும் அவரது உறவினர் ஒருவரின் மகளும் டூவீலரில் சென்றுள்ளனர்

4 பேர் ஒரே டுவீலரில் சென்ற நிலையில் திடீரென கார் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் கண்ணன் மற்றும் அவருடைய அண்ணன் மகள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பத்தாம் வகுப்பு மாணவி காவ்யா மற்றும் கண்ணனின் மகன் சபரீசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பத்தாம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கெட் வாங்க சென்ற நால்வர் விபத்தில் சிக்கி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web