பத்தாம் வகுப்பு தேர்வு: 2 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற மாணவிக்கு திடீரென கிடைத்த 100 மதிப்பெண்கள்

சமீபத்தில் நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒவ்வொரு மாநிலங்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரியா என்ற பத்தாம் வகுப்பு மாணவி மிகுந்த ஆர்வத்துடன் தனது தேர்வு முடிவை பார்த்தார். அப்போது அவர் கணிதத்தில் வெறும் 2 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளதாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தான் கணிதத் தேர்வை மிகவும் நன்றாக எழுதி இருந்ததாகவும் தனக்கு 100 மதிப்பெண்கள்
 

பத்தாம் வகுப்பு தேர்வு: 2 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற மாணவிக்கு திடீரென கிடைத்த 100 மதிப்பெண்கள்

சமீபத்தில் நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒவ்வொரு மாநிலங்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரியா என்ற பத்தாம் வகுப்பு மாணவி மிகுந்த ஆர்வத்துடன் தனது தேர்வு முடிவை பார்த்தார். அப்போது அவர் கணிதத்தில் வெறும் 2 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளதாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தான் கணிதத் தேர்வை மிகவும் நன்றாக எழுதி இருந்ததாகவும் தனக்கு 100 மதிப்பெண்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்று தான் எதிர்பார்த்ததாகவும், ஆனால் வெறும் இரண்டு மதிப்பெண்க தனக்கு அளிக்கப்பட்ட இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்

இதனை அடுத்து அவர் தனது தேர்வுத்தாளை மறுதிருத்தம் செய்ய விண்ணப்பம் செய்தார். அவரது தேர்வுத்தாள் மறுமுறை திருத்தப்பட்ட நிலையில் அவருக்கு அவர் எதிர்பார்த்தபடியே 100 முழு மதிப்பெண்கள் கிடைத்தது
வெறும் இரண்டு மதிப்பெண்கள் முதலில் கிடைத்த நிலையில் மாணவி சுப்ரியாவுக்கு தற்போது 100 மதிப்பெண் கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதனை அடுத்து கவனக்குறைவாக அவரது தேர்வுத்தாளை திருத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது வருகிறது

From around the web