10ஆம் வகுப்பு தேர்வு ரத்து: ஆல் பாஸ் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

10ஆம் வகுப்பு தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தாலும், நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்வு நடத்தப்படுவது இன்னும் 100% உறுதி செய்யப்படவில்லை. வரும் 11ஆம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்போதுதான் 10ஆம் வகுப்பு தேர்வு குறித்த இறுதி முடிவு தெரியவரும் இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்வு இன்றி பாஸ் என்று அறிவிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில்
 

10ஆம் வகுப்பு தேர்வு ரத்து: ஆல் பாஸ் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

10ஆம் வகுப்பு தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தாலும், நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்வு நடத்தப்படுவது இன்னும் 100% உறுதி செய்யப்படவில்லை.

வரும் 11ஆம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்போதுதான் 10ஆம் வகுப்பு தேர்வு குறித்த இறுதி முடிவு தெரியவரும்

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்வு இன்றி பாஸ் என்று அறிவிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பத்தாம் வகுப்பு ரத்து என்பது உறுதியாகிவிட்டது.

தெலுங்கானா போலவே தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

From around the web