ஆன்லைன் பாடம் புரியாமல் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வாய்ப்பு

 

நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்ய கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆன்லைன் பாடம் புரியாமல் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள சுபிக்ஷா என்ற பத்தாம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களாக ஆன்லைன் பாடங்களை படித்து வந்தார். இவர் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் திறமையானவர் என்பதும் இதற்காக அவர் முதல் அமைச்சரிடம் இருந்து பரிசும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஆன்லைன் மூலம் பத்தாம் வகுப்பு பாடங்களை படித்து வந்த சுமித்ராவுக்கு பாடங்கள் சுத்தமாக புரியவில்லை என்றும் இதனால் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியாது என்ற வருத்தம் அவருக்கு இருந்ததாகவும் குடும்பத்தினரிடம் அவரது கவலையை வெளிப்படுத்தியபோது குடும்பத்தினர் அவரை சமாதானப் படுத்தியதாகவும் தெரிகிறது

இருப்பினும் பெற்றோரின் சமாதானத்திற்கு சமாதானமாகால் மன உளைச்சலில் இருந்த மாணவி சுபிக்ஷா திடீரென நேற்று தாயின் சேலையை எடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் 

ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பாடங்கள் அனைவருக்கும் புரிவதில்லை என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு தற்கொலை நடந்துள்ளது ஏற்கனவே தற்கொலைகளை வைத்து அரசியல் செய்து வரும் அரசியல் கட்சிகள் இந்த தற்கொலையையும் விட போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web