10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு! தமிழ்நாட்டுல இல்ல!

கொரோனா அதிகரிப்பால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது மராட்டிய அரசு!
 
10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு! தமிழ்நாட்டுல இல்ல!

கண்ணுக்கு தெரியாமல் அனைவரின் உயிரையும் வாங்கும் ஒரு விதமான நுண்கிருமி கொரோனா.இந்த கொரோனா நோயானது நட்பு நாடான சீனாவில் முதல் முதலில் கண்டறிந்து அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் உலகமே இந்த நோய்க்காக  பயத்தில் இருந்தனர், மேலும் இந்தியாவில் இந்த கொரோனா நோய் பரவ தொடங்கியது. ஆனால் இந்திய அரசு எந்த ஒரு நாடும் பின்பற்றாத ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்தியது.

lockdown

இதனால் கொரோனா நோயானது கடந்த ஆண்டின் இறுதியில் கட்டுப்பாட்டிற்கு வந்தது. இதனால் பல நாடுகள் தரப்பில் இருந்து வந்த வண்ணம் இருந்தன.மேலும் பல நாடுகளும் இந்தியாவின் இந்த திட்டத்தினை தங்கள் நாடுகளில் நடைமுறைப்படுத்திட நிலையில் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் ஆனது தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் மிகவும் பீதியில் உள்ளனர். மேலும் நொடிக்கு நொடி இந்த கொரோனா நோயின் தாக்கம் அதிகம் உள்ளதாக மாறுகின்றது.

குறிப்பாக இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் உலக நாடுகளில் இந்தியா கொரோனா அதிகமுள்ள நாடாகவும் உள்ளது. இதனால் நாட்டு மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும் தற்போது மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாக அம்மாநில அரசு கொரோனா அதிகரிப்பால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது ஆயினும் கொரோனாவின் அச்சம் மக்களை வெகுவாக பயமுறுத்துகிறது.

From around the web