ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 1038 பேர் உயிரிழப்பு!ஒரே நாளில் இரண்டு லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனா நோயின் காரணமாக சிகிச்சை பலனின்றி ஒரேநாளில் 1038 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது!
 
ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 1038 பேர் உயிரிழப்பு!ஒரே நாளில் இரண்டு லட்சத்தை தாண்டியது!

அம்மா அப்பா என்ற வார்த்தைக்கு பின்னர் அனைவரும் சொன்ன வார்த்தையாக தற்போது கொரோனா என்ற வார்த்தை மாறியது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த நோயானது சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மாகாணம் முழுவதும் நோயினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதன்பிறகு உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தாக்கம் ஆனது உள்ளது மிகவும்  வேதனை அளித்தது எனினும் கடந்த ஆண்டில் இந்தியாவில் நோயானது வர தொடங்கியது.ஆனால் இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா  நோய் கட்டுப்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

corona

 சில வாரங்களாக இந்த கொரோனா  வீரியம் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்நோயின் தாக்கம் ஆனது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. மேலும் 24 மணி நேரத்தில் இந்தியாவில் சிகிச்சை பலனின்றி 1038 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து , மேலும் இதுவரை உயிரிழப்புகள் 1.73 லட்சம் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுவரை

இந்தியாவில் 1.4 கோடி பேருக்கு கொரோனா  தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா  இரண்டு லட்சத்தை தாண்டியது மிகவும் வேதனை அளிக்கிறது.குறிப்பாக நோய்த் தொற்றானது மராட்டியம் உத்திரபிரதேசம் டெல்லி போன்ற மாநிலங்களில் அதிகம் வீரியம் உள்ளதாக தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது தெரிய வந்துள்ளது. இதனால் சில மாநிலங்களில் இரவுநேர ஊடகங்களும் நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web