தமிழகத்தில் 103 கொரோனா மரணங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லையா? ஆர்டிஐ-வில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தினமும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும், சுமார் 100 பேர் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆர்.டி.ஐ வழியாக வெளி வந்துள்ள தகவல் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 103 கொரோனா மரணங்கள் அரசின் கணக்கில் சேர்க்கப்படாத தகவல் ஆர்டிஐ வாயிலாக தெரியவந்துள்ளது. நெல்லையில் இதுவரை கொரோனா வைரஸால் 182 பேர் பலியாகியிருப்பதாக அரசு அறிக்கையில் தகவல் உள்ளது. 

ஆனால் நெல்லை மாவட்டத்தில் 285 பேர் பலி என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பதில் கிடைத்துள்ளது. எனவே இதன் மூலம் 103 கொரோனா மரணங்கள் கணக்கில் சேர்க்கவில்லையா? என்ற கேள்வி எழுந்து ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை விரைவில் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web