சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு முதல் அனைத்து பள்ளி தேர்வுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்றும் ஜூலை 1 முதல் 15 வரை நடைபெற திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த தேர்வை நடத்த வேண்டுமா? என்பது குறித்து உச்ச
 

சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு முதல் அனைத்து பள்ளி தேர்வுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்றும் ஜூலை 1 முதல் 15 வரை நடைபெற திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த தேர்வை நடத்த வேண்டுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேர்வு நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் முடிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனால் இந்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவது உறுதி செய்யப்படுகிறது. மேலும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் இதற்கு முந்தைய 3 தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெறலாம் அல்லது நிலைமை சீரடைந்து பிறகு நடத்தப்படும் தேர்வுகளில் பங்கு கொண்டு தேர்ச்சி பெறலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

From around the web