திரையரங்குகளில் 100% இருக்கை: தமிழகத்தில் ரத்து, மேற்குவங்கத்தில் அமல்

 

திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினரின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு சமீபத்தில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தது என்பதும் இது குறித்த அரசாணை சமீபத்தில் வெளியானது என்பதும் தெரிந்ததே 

ஆனால் இந்த அரசாணையை மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளதை அடுத்து ரத்து செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்தார். எனவே மீண்டும் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 50% இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

mamtha

இந்த நிலையில் தமிழகத்தில் 100% இருக்கை அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்  மேற்கு வங்க மாநிலத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தை கண்டித்து போலவே மத்திய அரசும், நீதிமன்றமும் மேற்குவங்க மாநிலத்தையும் கண்டிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web